உலக செய்திகள்

அமெரிக்காவில் ஏரியில் இருந்து இந்திய மாணவி சடலமாக மீட்பு + "||" + Indian-Origin Student's Body Found In Lake At US University: Report

அமெரிக்காவில் ஏரியில் இருந்து இந்திய மாணவி சடலமாக மீட்பு

அமெரிக்காவில் ஏரியில் இருந்து இந்திய மாணவி சடலமாக மீட்பு
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவியின் உடல் அங்குள்ள பல்கலைக்கழக குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்

கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21). இவர் அமெரிக்காவின்  இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். ஆன்ரோஸ் கடந்த 21-ம் தேதியில் இருந்து காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டனர். அதில் மாணவி ஆபத்தான நிலையில் இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆன்ரோஸ் உடல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரியில்  இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் உடலில் காயங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு விபத்து என்றே போலீசார் கருதுகின்றனர். இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஆன்ரோஸ் பியானோ வாசிப்பதில் சிறந்து விளங்கியதோடு மிகவும் புத்திசாலியான மாணவி என்றும் பெயரெடுத்தவர். அவரது மரணம் சக மாணவர்களை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாக்கியுள்ளது. இதனிடையில் ஆன்ரோஸ் ஒரு புத்திசாலித்தனமான பெண்ணாவார். அவர்  குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என பல்கலைக்கழகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் -அமெரிக்கா
சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா தனது ஆதரவை வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
2. ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3. ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் ; அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை
ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
4. இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை
இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
5. கொரோனா வைரஸ் பாதிப்பு: ஆய்வு செய்ய அமெரிக்க சுகாதார நிபுணர்களுக்கு சீனா அனுமதி
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பின் குழுவில் உள்ள அமெரிக்க சுகாதார நிபுணர்களை அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.