மாநில செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை + "||" + Tanjay Periya Temple Kumbabhishekam will be held in Tamil and Sanskrit- Department of Hindu Religious Affairs

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரியும், குடமுழுக்கிற்கு தடை விதிக்க கோரியும் ஐகோர்ட்  மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடைபெறும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து குடமுழுக்கு எந்த மொழிகளில் செய்யப்படும் என்பதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்: கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரம்
வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
2. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் சிவனடியார்கள் கோரிக்கை
தஞ்சை பெரியகோவிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை வைத்தனர்.
3. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: புதிய சாலை அமைக்கும் பணி
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
4. தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: 50 மீட்டர் இடைவெளியில் பாதுகாப்புக்காக தடுப்புகட்டைகள் அமைக்கப்படுகிறது
தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக பெரியகோவில் வளாகத்தில் 50 மீட்டர் நீள இடைவெளியில் தடுப்புகட்டைகள் பாதுகாப்புக்காக அமைக்கப்படுகின்றன. இதற்காக போலீசார் அளந்து குறியீடு செய்யும்பணியில் நேற்று ஈடுபட்டனர்.
5. பிப்ரவரி 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
பிப்ரவரி 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆய்வு செய்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை