தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி ஐகோர்ட்டை நாடிய கேரள ஜோடி + "||" + Gay couple from Kerala moves HC seeking legalisation of same-sex marriage

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி ஐகோர்ட்டை நாடிய கேரள ஜோடி

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி  ஐகோர்ட்டை நாடிய கேரள ஜோடி
கேரளாவைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை தம்பதியினர் தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக பதிவு செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்,

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த நிகேஷ் உஷா புஷ்கரன் மற்றும் சோனு என்ற ஓரினச்சேர்க்கை தம்பதி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால், 1954 சிறப்பு திருமணச் சட்டத்தின் விதிகளின் படி அதை அங்கீகரிக்க, கோவில் நிர்வாகங்கள் மறுத்துவிட்டதாகவும், திருமணம் செய்ய விரும்பும் ஒரே பாலின தம்பதிகளின் அடிப்படை உரிமைகளை இந்த விதிமுறைகள் மீறுகிறது. எனவே, ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு, தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்திட உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். 

இதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஓரினச்சேர்க்கை தம்பதியினரின் மனு குறித்து பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...