மாநில செய்திகள்

டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக அரசு செயலாளர் இடமாற்றம் ; ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + The transfer of the Secretary of State is for denying to cooperate with the tender matter; Stalin's indictment

டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக அரசு செயலாளர் இடமாற்றம் ; ஸ்டாலின் குற்றச்சாட்டு

டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக அரசு செயலாளர் இடமாற்றம் ; ஸ்டாலின் குற்றச்சாட்டு
டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக தமிழக அரசு செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு கைத்திறன் மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருந்த சந்தோஷ் பாபு கடந்த 2018ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான டாக்டர் சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வில் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் அ.தி.மு.க. அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக விருப்பு ஓய்வு முடிவை எடுத்துள்ளார் என சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இதனிடையே, டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததால், தகவல் தொழில்நுட்பத்துறை அரசு செயலாளர் சந்தோஷ் பாபு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என்று மற்றொரு குற்றச்சாட்டை ஸ்டாலின் இன்று கூறியுள்ளார்.

அதிகாரி இடமாற்றம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் முணுமுணுப்பே காட்டாமல் முடங்கி போனது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பாரத் நெட்’, ‘தமிழ் நெட்’ செயலாக்கம் குறித்த பணிகளை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏன் திடீர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளார்? என கேட்டுள்ள ஸ்டாலின், பாரத் நெட் திட்டம் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவம் அதிகரிப்பு: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் பணி இடமாற்றம்
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவம் அதிகரிப்பு காரணமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேரை பணி இடமாற்றம் செய்து கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
2. 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை இடமாற்றம் செய்ததை கண்டித்து பாடை கட்டி, மேளம் அடித்து போராட்டம்
எலச்சிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை இடமாற்றம் செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பாடை கட்டி, மேளம் அடித்து போராட்டம் நடத்தப்பட்டது.
3. நெல்லை மாவட்டத்தில் 35 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் ‌ஷில்பா அதிரடி
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 35 தாசில்தார்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. வேலை நிறுத்த போராட்டம் 7-வது நாளாக நீடிப்பு: சேலத்தில் 2 டாக்டர்கள் இடமாற்றம்
சேலத்தில் 7-வது நாளாக அரசு டாக்டர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் 2 டாக்டர்கள் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5. வங்காளதேசம்: ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய முடிவு
வங்காளதேசத்தில் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களை வங்கக்கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய வங்காளதேச அரசு முடிவு செய்துள்ளது.