தேசிய செய்திகள்

ரூ.2496 கோடி டாலர் விசா கட்டணம் : சட்டவிரோதமாக அமெரிக்கா வசூலித்தது -தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கு + "||" + Lawsuit alleges US illegally collected $350 million in visa fees from tech companies

ரூ.2496 கோடி டாலர் விசா கட்டணம் : சட்டவிரோதமாக அமெரிக்கா வசூலித்தது -தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கு

ரூ.2496 கோடி டாலர் விசா கட்டணம் : சட்டவிரோதமாக அமெரிக்கா வசூலித்தது -தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கு
சட்டவிரோதமாக அமெரிக்கா ரூ.2496 கோடி டாலர் விசா கட்டணமாக வசூலித்தது என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
பெங்களூரு: 

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்)  அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச் -1 பி விசாக்களின் விண்ணப்பத்தை மாற்றுவதற்காக மொத்தம் 350 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.2496 கோடி) சட்டவிரோதமாக வசூலித்ததாக குற்றம் சாட்டி  அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.டி.சர்வ் வி அலையன்ஸ், ஐடெக் யு.எஸ், ஸ்மார்ட் ஒர்க்ஸ் மற்றும் சாக்சன் குளோபல் ஆகிய நிறுவனங்கள், யு.எஸ்.சி.ஐ.எஸ் தொடர்ந்து இந்த கட்டணத்தை வசூலிப்பதை நீதிமன்றம் நிறுத்த வேண்டும் என்றும் கடந்த ஆறு ஆண்டுகளாக வசூலித்த கட்டணங்கள் அனைத்தையும் திருப்பித் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஐ.டி.சர்வ் அலையன்ஸ் என்பது அமெரிக்காவில் ஐ.டி சேவைகள், பணியாளர்கள் மற்றும் ஆலோசனை அமைப்புகளின் மிகப்பெரிய சங்கமாகும், இதில் 1,250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. மற்ற மூன்று இணைவாதிகளும் ஐ. டி சர்வ் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

எச் -1 பி  விசாவுக்கு டாலர்  2,000 செலவாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, எச் -1 பி மற்றும் எல் -1 ஏ மற்றும் எல் -1 பி மனுக்களுக்கு கூடுதலாக,  4,000 டாலர் விதிக்கப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...