உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி : தன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் - தென் கொரிய அரசு முடிவு + "||" + South Koreans call for petition to exclude Chinese people for virus

கொரோனா வைரஸ் எதிரொலி : தன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் - தென் கொரிய அரசு முடிவு

கொரோனா வைரஸ் எதிரொலி : தன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் - தென் கொரிய அரசு முடிவு
கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு குடிமகன்களை மீட்க தென்கொரிய சீனாவிற்கு தனி விமானங்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிஜீங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான்  நகரில் கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்கியது. இதனால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில்,கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவின் வுகான் நகரில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமகன்களை மீட்க தென்கொரிய அரசு தனி விமானங்களை அனுப்ப உள்ளது. ஒரு கோடி மக்களுக்கு மேல் வசித்து வரும் வுகான் நகரில் தான் கொரோனா வைரஸ் தாக்குதல் முதலில் காணப்பட்டது. இதனையடுத்து , அங்கு வசிக்கும் தென் கொரிய குடிமகன்கள் சுமார் 700 பேர் சீனாவிலிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். இதனால் அவர்களை மீட்க தனி விமானத்தை தென்கொரிய அரசு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் தகவல்
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை- பீலா ராஜேஷ்
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.