தேசிய செய்திகள்

கொரானா வைரஸை கட்டுப்படுத்த தலாய் லாமா கூறிய அறிவுரை! + "||" + Dalai Lama asks devotees to chant mantra to contain spread of coronavirus

கொரானா வைரஸை கட்டுப்படுத்த தலாய் லாமா கூறிய அறிவுரை!

கொரானா வைரஸை கட்டுப்படுத்த  தலாய் லாமா கூறிய அறிவுரை!
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 'ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா' என்ற மந்திரத்தை சொல்லுங்கள் என திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
தர்மசாலா,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் உருவான வுகான் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுஷீமீளனர். இதனால் வுகான் நகரம் அமைந்துள்ள கியூபி மாகாணம்முழுமையாக முடக்கப்பட்
டுள்ளது.

இன்று)காலை நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி யானவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500 பேர் தீவிர
சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் கியூபி மாகாணத்தில் பஸ், ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 1 கோடிபேர் வசிக்கும் வுகான் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், , சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்கும்படி இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் உள்ள திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். 

இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் ' ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். 

இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும், என தலாய் லாமா தெரிவித்தார். மேலும், அந்த மந்திரத்தை அவர் உச்சரிப்பது போன்ற வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தலாய்லாமா  மந்திரத்த்தை உச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.