மாநில செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் வாட்ஸ்–அப்பில் வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு + "||" + Anita Radhakrishnan MLA threatens

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் வாட்ஸ்–அப்பில் வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் வாட்ஸ்–அப்பில் வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு வாட்ஸ்–அப்பில் மிரட்டல் வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சலவையாளர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியும், மிரட்டல் விடுத்தும் வீடியோ பதிவு செய்து, அதனை ‘வாட்ஸ் அப்‘ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் விடுத்து வாலிபர் ‘வாட்ஸ்–அப்‘பில் வீடியோ வெளியிட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.