உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது + "||" + 4 boys arrested for damaging Hindu temple in Pakistan

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது
பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கராச்சி,

பாகிஸ்தானில் சிந்து மாகாணம், சாக்ரோ பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக கோவிலை சேதப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.


இதற்கிடையில், கோவிலை சேதப்படுத்தியவர்கள் ‘தெய்வ நிந்தனை’ செய்ததாகக்கூறி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிந்து மாகாண சிறுபான்மை துறை மந்திரி அரிராம் லால் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

“சாக்ரோ அமைதிக்கு பெயர் பெற்ற நகரமாகும். இங்கு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்து மக்களை அதிர்ச்சியடையச் செய்யும் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றும் அவர் சொன்னார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
3. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
4. பாகிஸ்தான் - கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289- ஆக உயர்ந்துள்ளது.
5. சீனாவுடன் இணைந்து உயிரியல் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறோமா? பாகிஸ்தான் பதில்
இந்தியா மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.