தேசிய செய்திகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + "||" + Chennai-Salem 8 way road Case cannot be investigated immediately: Supreme Court denial

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
புதுடெல்லி,

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என பட்டியல் இடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால் பணிகள் முடங்கி இருக்கிறது. எனவே இதனை அவசர வழக்காக கருதி நாளையே (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க இயலாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்: மார்ச் 1-ந்தேதி நடக்கிறது
சென்னையில் மார்ச் 1-ந்தேதி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2. சென்னையில் நடந்த ஆசிய டிரையத்லான் போட்டியில் செர்பியா வீரர் முதலிடம்
சென்னையில் நடந்த ஆசிய டிரையத்லான் போட்டியில் செர்பியா வீரர் முதலிடம் பிடித்தார்.
3. சென்னை, திருவள்ளூருக்கு குழாய் வழி கியாஸ் வினியோகம்: அதானி நிறுவன வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை, திருவள்ளூருக்கு குழாய் வழி கியாஸ் வினியோகம் செய்வது தொடர்பான, அதானி நிறுவன வழக்கினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4. சென்னை-பெங்களூரு வழித்தடம் கொச்சி வரை நீட்டிப்பு; நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் தொழில் மையங்கள் - முதன்மை செயலாளர் தகவல்
சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடம் கொச்சி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்படும் என்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
5. சென்னையில் தடையை மீறி போராட்டம்: 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.