மாநில செய்திகள்

240 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார் + "||" + 240 new buses Chief Minister Edappadi Palanisamy He started the flag

240 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

240 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 240 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை

அண்மையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதற்கான நிதி ஒதுக்கீடும் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு இருந்தது.

இதனடிப்படையில் வாங்கப்பட்ட 240 புதிய பேருந்துகளை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட அம்மா அரசு நடமாடும் 2 பணிமனைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த விழாவில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 37, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 103, விழுப்புரத்திற்கு 25, சேலத்திற்கு 10, கோவைக்கு 20, கும்பகோணத்திற்கு 35, மதுரை, நெல்லைக்கு தலா 5 என மொத்தம் 240 பேருந்துகள் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.