சினிமா செய்திகள்

மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது -ரஜினிகாந்த் + "||" + unforgettable experience - Rajinikanth (

மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது -ரஜினிகாந்த்

மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது -ரஜினிகாந்த்
மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னை,

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி 'மேன் வெர்சஸ் வைல்டு'. இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளை சொல்லும் இந்நிகழ்ச்சி இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். பியர் கிரில்ஸ் இயக்கும் இந்த  நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பியர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. மோடியின் பாதையில் ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பியர் கிரில்சுடன் பேசுவது போல் நிகழ்ச்சி அமையும்.

இந்த பயணத்தில் ரஜினிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது என்றும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை. சிறு முள் குத்தி விட்டது என்று கூறினார்.

இந்த நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் In to The Wild எனும் புதிய ஷோவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பியர்  கிரில்ஸ் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். என்னது பாலிவுட் சூப்பர் ஸ்டாரா? என ரசிகர்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என பியர் கிரில்ஸ் மாற்றினார்.


'மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. பியர் கிரில்சுக்கு நன்றி என தனது ட்விட்டரில் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி - ரஜினிகாந்த் இரங்கல்
நூறாண்டுகள் ஆனாலும் எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
2. ஆன்மீக அரசியலின் நிலை என்ன? மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ஆலோசனை
ஆன்மீக அரசியலின் நிலை என்ன? என்ன என்பது குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார்.
3. கந்த சஷ்டி கவசம் விவகாரம்: மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் - ரஜினிகாந்த்
கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... எல்லா மதமும் சம்மதமே .. என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
4. முகக்கவசம் அணிந்து கார் ஓட்டும் ரஜினி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
ரஜினியின் சமீபத்திய புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.
5. "சம்பந்தப்பட்டவர்களை சத்தியமா விடவே கூடாது" - சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினிகாந்த் ஆவேசம்
சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...