மாநில செய்திகள்

குடமுழுக்கு விழா : தஞ்சை பெரிய கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு..! + "||" + Consecrated Function: Security of Thanjavur Temple

குடமுழுக்கு விழா : தஞ்சை பெரிய கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு..!

குடமுழுக்கு விழா : தஞ்சை பெரிய கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு..!
வரலாற்று புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தஞ்சை

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் அடுத்த மாதம் 5-ம் தேதி குடமுழுக்கு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 27-ம் தேதி தொடங்கப்பட்டன. இன்று திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது.

இதில் நவதானியங்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள் கொண்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டு பாலாலயம் செய்யப்பட்ட உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கோவில் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூன்றடுக்கு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்களும், காவல் கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, இரும்பினால் ஆன 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி 160 இடங்களில் கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.

இதற்காக பெரிய கோவில் எதிரே கட்டுப்பாட்டு அறையும்  அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கோவில் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிப்ரவரி 4, 5 ஆகிய இரு நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ‘ஓம்நமசிவாய’ பக்தி கோஷம் விண்ணை முட்டியது
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’... என எழுப்பிய பக்தி கோஷம் விண்ணை முட்டியது.
2. தஞ்சை பெரிய கோவில் கருவறை மகத்துவம்
உலகப் பாரம்பரிய சின்னமாக ஐக்கிய நாட்டு பண்பாட்டு கல்வி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று (5-ந்தேதி) குடமுழுக்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
3. தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு ; 23 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
4. தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5. தஞ்சை பெரியகோவிலில் தமிழ்-சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி - மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
தஞ்சை பெரிய கோவிலில் வருகிற 5-ந்தேதி தமிழ்-சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.