மாநில செய்திகள்

தேசிய செய்தித்தாள் தினம்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து + "||" + National Newspaper Day Congratulations to the Chief Minister, Deputy Chief Minister

தேசிய செய்தித்தாள் தினம்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து

தேசிய செய்தித்தாள் தினம்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து
தேசிய செய்தித்தாள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,

சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் போன்ற தூண்களைக் கொண்ட ஜனநாயக மாளிகைக்கு நான்காவது தூணாக பத்திரிகை துறை திகழ்வதாகவும், அத்துறையினர்  பூரண சுதந்திரத்தோடு, நாட்டு மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்திட வாழ்த்துவதாக முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இதுபோல, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக நிகழ்வுகளை உடனுக்குடன் உண்மை தன்மையுடன் வழங்கிட இரவு பகல் பாராது உழைக்கும் ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் துறையினருக்கு தமது உளமார்ந்த தேசிய செய்தித்தாள் தின நல்வாழ்த்துகளை  தெரிவிப்பதாக கூறியுள்ளார்.