உலக செய்திகள்

சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு + "||" + World Health Organization to send delegation to China to help combat coronavirus outbreak

சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
பெய்ஜிங்,

சீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திபெத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. 

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள  நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய தகவல் அறிந்ததும் இரண்டு நாள் பயணமாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் சீனா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பின்னர் இந்த முடிவை அவர் அறிவித்தார்.