தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் குமார் சர்மா கருணை மனு தாக்கல் + "||" + 2012 Delhi gang-rape case: Mercy petition has been filed by convict, Vinay Sharma

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் குமார் சர்மா கருணை மனு தாக்கல்

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் குமார் சர்மா கருணை மனு தாக்கல்
நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி வினய் குமார் சர்மா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

நிர்பயா என்ற மருத்துவ மாணவி, டெல்லியில் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட  வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டினால் உறுதி செய்யப்பட்டு விட்டது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் கடைசி சட்ட ஆயுதமாக கருதப்படுகிற சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த 17-ந்தேதி ஜனாதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து 4 பேரையும் தூக்கில் போட டெல்லி செசன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் மரண வாரண்டு பிறப்பித்தார். 4 பேரையும் பிப்ரவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முகேஷ் குமார் சிங் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்பயா குற்றவாளியின் மனுவை சுப்ரீம்  கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார் என அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, முகேஷ் அளித்த கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வினய் குமார் சர்மாவும் கருணை மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...