மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முறைகேடு: திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை பிடிக்கும் முயற்சி - மு.க.ஸ்டாலின் + "||" + TNPSCScam Trying to catch the whales off the whales MK Stalin

குரூப்-4 தேர்வு முறைகேடு: திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை பிடிக்கும் முயற்சி - மு.க.ஸ்டாலின்

குரூப்-4 தேர்வு முறைகேடு: திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை பிடிக்கும் முயற்சி - மு.க.ஸ்டாலின்
குரூப்-4 தேர்வு முறைகேடுகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. கிளார்க் தான் காரணம் என்பது, திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை பிடிக்கும் முயற்சி என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் சினிமாக்களில் வரும் காட்சியை போல் கற்பனைக்கதைகளை மிஞ்சும் வகையில் உள்ளது.  மாநிலம் முழுவதும் நடைபெறும் கைதுகளை பார்க்கும்போது, ஒரு மையத்தில் நடைபெற்ற முறைகேடாக தெரியவில்லை.

தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் இத்தனை நாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கே போயிருந்தார். இந்த முறைகேட்டில் திமிங்கலங்களை தப்பிக்க விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். மொத்தத்தில் புரோக்கர்களின் புகலிடமாக டி.என்.பி.எஸ்.சி., மாறியுள்ளது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இது போன்று எத்தனை தேர்வுகளில் முறைகேடு நடந்தது. அதன் ஆணி வேர் எங்குள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.  கிளார்க் துணையுடன் முறைகேடுகள் செய்துவிட முடியும் என்றால், டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதற்கு? 

இந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்காக ஜெயகுமாரை அமைச்சர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க., இளைஞர் அணியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குரூப்-4 தேர்வு முறைகேடு: புரோக்கர் ஜெயக்குமாரை சிவகங்கை அழைத்து வந்து விசாரணை - 3 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிக்கல்
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் சிக்கிய புரோக்கர் ஜெயக்குமாரை சிவகங்கையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 3 கிராம நிர்வாக அலுவலர்களை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கு : சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
3. குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
4. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 12 பேர் கைது முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு சி.பி.சி.ஐ.டி. வேட்டை தீவிரம்
குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
5. குரூப்-4 தேர்வு முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் உள்பட மேலும் 2 பேர் கைது-50 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீச்சு
குரூப்-4 தேர்வு முறை கேடு வழக்கில் அதிரடி திருப்பமாக டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகள் 50 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலை விரித்துள்ளனர்.