தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கப்பல் பயணிகள், ஊழியர்களிடம் கொரோனா பரிசோதனை + "||" + India's first NiV outbreak victim town Siliguri is sinking deep under panic following Corona outbreak in China

கொரோனா வைரஸ்: கப்பல் பயணிகள், ஊழியர்களிடம் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ்: கப்பல் பயணிகள், ஊழியர்களிடம் கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் அறிகுறி குறித்த பரிசோதனை கப்பல் பயணிகள், ஊழியர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கொல்கத்தா,

சீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திபெத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. 

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள  நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விமான நிலையங்களை தொடர்ந்து துறைமுகங்களிலும் கப்பல் பயணிகளிடம் கொரோனா வைரஸ் அறிகுறி குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் உள்ள படகு குழாம் ஒன்றில், கப்பல் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு  கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த பரிசோதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் மோகன்லால் ரூ.50 லட்சம் நிவாரண நிதி
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன.
2. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிருப்தி உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் - அமெரிக்கா திடீர் மிரட்டல்
கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
3. கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா? - போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டிப்பு
கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிப்பவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டித்தார்.
4. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவன்- மாணவி
கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு மாணவனும், ஒருமாணவியும் விழிப்புணர்வு ஏற்படுதத்தி வருகிறார்கள்.
5. கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்கு ஏற்றிச்செல்லும் வருமானம் ரூ.2,125 கோடி இழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கான வருமானம் ரூ.2,125 கோடி அளவுக்கு குறைந்து விட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...