தேசிய செய்திகள்

தேசிய மாணவர் படை பேரணியில் பேச்சு: தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறினார் காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Congress Alleges Poll Code Violation by PM Modi, Asks EC to Take Note of His NCC Rally

தேசிய மாணவர் படை பேரணியில் பேச்சு: தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறினார் காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேசிய மாணவர் படை பேரணியில் பேச்சு: தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறினார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேசிய மாணவர் படை பேரணியில் தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறினார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

டெல்லியில் சட்டசபை தேர்தல் நடக்கும்நிலையில், தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். இளம் வயதினரிடம் அவர் பேசியது அவரது பதவிக்கு அழகல்ல. இது தேர்தல் நடத்தை விதிமீறல்.

பிரதமர் என்பதற்காக, அவர் விதிமுறையை மீறலாம் என்று அர்த்தம் அல்ல. இதை தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் கமி‌ஷனின் நடுநிலைமை குறித்து நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.