தேசிய செய்திகள்

இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு + "||" + Raveesh Kumar, MEA: Chinese Government requested for permission to operate two flights to bring back our nationals from Hubei Province of China

இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு

இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு
சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி, 

ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் இந்தியர்களை அழைத்துவர 2 விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவும் சீன அரசின் ஒப்புதல் கேட்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறுகையில், ‘ஹுபெய் மாகாணத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு வர 2 விமானங்கள் இயக்குவதற்கு அனுமதி தருமாறு சீன அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சீன அரசுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

மேலும் ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் இந்தியர்களுக்கும் இந்த தகவல் பகிரப்பட்டு உள்ளது. அதன்படி தாய்நாடு திரும்புவதற்காக இதுவரை அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளாதவர்கள் விரைவில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.