மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1,035 கோடியில் துணை மின் நிலையங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் + "||" + Rs. 1,035 crore sub power plants in Tamil Nadu

தமிழகத்தில் ரூ.1,035 கோடியில் துணை மின் நிலையங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் ரூ.1,035 கோடியில் துணை மின் நிலையங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.1,035 கோடியில் துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை, 

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், திருவள்ளூர் மாவட்டம் பூணிமாங்காடு, மாமண்டூர், பாலாபுரம் உள்பட மாநிலம் முழுவதும் பல இடங்களில் ரூ.1,035 கோடியே 28 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் “நீர்வளம் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு” என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வளம் சேகரிப்புக்கான முன்முயற்சிக்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஸ்காச் விருது டெல்லியில் வழங்கப்பட்டது. அதை எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.