மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை: சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேர் வீடுகளில் வைத்து கண்காணிப்பு + "||" + Measures to prevent the spread of coronavirus

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை: சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேர் வீடுகளில் வைத்து கண்காணிப்பு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை: சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேர் வீடுகளில் வைத்து கண்காணிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேர் அவர்களின் வீடுகளிலேயே தங்க வைத்து கண்காணிக்கப்படுவதாக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
ஆலந்தூர், 

சீனா உள்பட 5-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து சென்னைக்கு நேரிடையாக விமான சேவை கிடையாது. தினமும் ஹாங்காங்கில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை வரும் விமானத்தில் பயணம் செய்பவர்களை கண்காணிக்க சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

அவருடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணை யக இயக்குனர் (பொறுப்பு) தீபக், பொது சுகாதாரதுறை இயக்குனர் குழந்தைசாமி, திட்ட இயக்குனர் நாகராஜன், 108 அம்புலன்ஸ் துறை இயக்குனர் விஜயகுமார், தொற்றுநோய் தடுப்பு துறை அதிகாரி சம்பத், குடியுரிமை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், தமிழக சுகாதார துறை அதிகாரிகள், விமான நிலைய மருத்துவ குழுவினர் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தினார்கள்.

பின்னர் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை விமான நிலையத்தில் நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்காக குடியுரிமை சோதனைக்காக தனியாக 10 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஸ்கேனிங் கருவி மூலமாக பயணிகளின் உடல் சூட்டை வைத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்பதை கண்டுபிடித்து, அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கான தனி உடைகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். இதற்காக விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாக னமும் தயாராக உள்ளது.

68 பேர் கண்காணிப்பு

சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கடந்த 5 நாட்களாக சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். இதுவரை 15 ஆயிரம் பேர் சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 10 சீனர்கள் உள்பட 68 பயணிகள் பொது இடங்களுக்கு செல்லாமல் அவர்களின் வீடுகளிலேயே தங்க வைத்து, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு என தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது? என்பது குறித்த ஒத்திகை நிகழ்வு நேற்று நடந்தது.