தேசிய செய்திகள்

டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல் + "||" + Trump visits Gujarat: first-minister information

டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல்

டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல்
டிரம்ப் குஜராத் வர உள்ளதாக முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் பிப்ரவரி 24, அல்லது 26-ந்தேதி இந்தியா வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். விரைவில் சுற்றுப்பயண தேதி இறுதி செய்யப்படும்.


இதற்கிடையே குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றுப்படுகையை டிரம்ப் பார்வையிட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி கூறியுள்ளார். டெல்லி சாஸ்திரி நகரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், ‘பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஆசிய கண்டத்திலேயே சுத்தமான ஆறாக சபர்மதி நதி விளங்குகிறது. ஜப்பான், இஸ்ரேல் நாட்டு பிரதமர்கள் இதனை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் வருகிறார். அவரும் சபர்மதி ஆற்றுப்படுகையை பார்வையிடுகிறார்’ என்று குறிப்பிட்டார். ஆனால் டிரம்ப் வரும் தேதியை அவர் குறிப்பிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை: தனுஷ்கோடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்க வலியுறுத்தல்
வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வருவதால் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
3. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன?
டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையின் முடிவு என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
4. டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு
டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேசினார்.
5. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில்
டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா செய்யப்பட்டது குறித்து, அவரே பதில் அளித்துள்ளார்.