தேசிய செய்திகள்

‘கெஜ்ரிவால் பயங்கரவாதி’ என பா.ஜனதா எம்.பி. தாக்கு: சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது + "||" + BJP MP calls Kejriwal a terrorist model Attack: Social websites have gone viral

‘கெஜ்ரிவால் பயங்கரவாதி’ என பா.ஜனதா எம்.பி. தாக்கு: சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது

‘கெஜ்ரிவால் பயங்கரவாதி’ என பா.ஜனதா எம்.பி. தாக்கு: சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது
கெஜ்ரிவால் பயங்கரவாதி என பா.ஜனதா எம்.பி. தாக்கி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் களத்தில் அனல் வீசுகிறது. முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் மேற்கு டெல்லி பா.ஜனதா எம்.பி. பர்வேஷ் வர்மா, கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் அரசு சொத்துக்களை சேதப்படுத்துவதுபோல கெஜ்ரிவால் சேதப்படுத்துகிறார்” என கூறினார். இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.


இதற்கு கெஜ்ரிவால் வேதனை தெரிவித்து டுவிட்டரில் உடனே ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “டெல்லி மக்களுக்காக 5 ஆண்டுகள் இரவும் பகலும் கடினமாக உழைத்தேன். எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தேன். அரசியலில் சேர்ந்த பின்னர் மக்களின் வாழ்க்கை மேம்பட பல சிரமங்களை எதிர்கொண்டேன். இன்று பதிலுக்கு பாரதீய ஜனதா என்னை பயங்கரவாதி என்று அழைக்கிறது. இது மிகவும் வலிக்கிறது” என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
2. டெல்லியை திறந்து விடும் நேரம் வந்துவிட்டது;கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும்- கெஜ்ரிவால்
கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு
டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு டெல்லியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
4. காந்தி பற்றிய பா.ஜனதா எம்.பி. கருத்துக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், தி.மு.க. வெளிநடப்பு
மகாத்மா காந்தி பற்றிய பா.ஜனதா எம்.பி.யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
5. கெஜ்ரிவாலின் சவாலுக்குத் தயார் - அமித் ஷா
அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான் தயார் என்றும், நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.