உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்ட வாக்கெடுப்பு தள்ளிவைப்பு -இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி + "||" + Diplomatic victory for India says govt sources as EU Parliament defers vote on CAA motion

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்ட வாக்கெடுப்பு தள்ளிவைப்பு -இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்ட வாக்கெடுப்பு தள்ளிவைப்பு -இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்ட வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி

இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விமர்சிப்பது தொடர்பான  கூட்டுத் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதத்தை உறுப்பினர்கள் ஜனவரி 29 இரவு தொடங்கினர். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்  மீதான வாக்கெடுப்பை மார்ச் 2020 வரை நடத்த வேண்டாம் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் முடிவெடுத்துள்ளது.

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13-ம் தேதி பிரஸ்ஸல்ஸ் செல்கிறார். இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினர், ஐரோப்பிய மக்கள் கட்சியைச் சேர்ந்த மைக்கேல் காலெர், இந்தியாவும் இந்த தீர்மானத்தில் பங்கேற்கும் விதமாக வாக்கெடுப்பை தள்ளி வைக்கும் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

மார்ச் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களைப் பொறுத்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதனை ஜனநாயக நடைமுறைகளிலேயே இந்தியா கொண்டு வந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று இந்திய அரசுத் தரப்புகள் தெரிவிக்கிறது.

வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டதை இந்தியாவுக்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றி என்பதாக அரசு வட்டாரங்கள்  தெரிவித்து உள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...