சினிமா செய்திகள்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார் + "||" + Actor and composer TS Raghavendra has passed away

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் டி.எஸ்.ராகவேந்திரா (75) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
சென்னை

நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா உடல் நலகுறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 75. வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக அறிமுகம் ஆனவர்  டி.எஸ். ராகவேந்திரா. அதன்பின் சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளராகவும் இருந்து உள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.எஸ்.ராகவேந்திரா இன்று மரணமடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினரையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதிச்சடங்குகள் இன்று மதியம் கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
2. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்
படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
3. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
4. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
5. நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.