தேசிய செய்திகள்

காந்தியின் 73-வது நினைவுதினம் அனுசரிப்பு : ஜனாதிபதி - பிரதமர் மரியாதை + "||" + Delhi: President Ram Nath Kovind pays tribute to #MahatmaGandhi at Raj Ghat on his death anniversary.

காந்தியின் 73-வது நினைவுதினம் அனுசரிப்பு : ஜனாதிபதி - பிரதமர் மரியாதை

காந்தியின் 73-வது நினைவுதினம் அனுசரிப்பு : ஜனாதிபதி - பிரதமர் மரியாதை
இன்று காந்தியின் 73-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 3 தளபதிகள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியையொட்டி காந்தி சிலைக்கு தறியால் நெய்யப்பட்ட கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சென்னை சர்வோதயா சங்கம் சார்பில் காந்தியின் விருப்ப பாடலான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடப்பட்டது. கவர்னர்  முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அந்த பாடலை சிறிது நேரம் கேட்டு ரசித்தனர்.