தேசிய செய்திகள்

இந்தியாவிற்கும் வந்தது கொடிய கொரோனா வைரஸ் ; கேரள மாணவர் பாதிப்பு உறுதியானது + "||" + First case of coronavirus in India, student from Wuhan, China under observation in Kerala

இந்தியாவிற்கும் வந்தது கொடிய கொரோனா வைரஸ் ; கேரள மாணவர் பாதிப்பு உறுதியானது

இந்தியாவிற்கும் வந்தது கொடிய கொரோனா வைரஸ் ; கேரள மாணவர் பாதிப்பு உறுதியானது
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் உள்ள 8 பேர், வில்சன் கார்டன் பகுதியிலுள்ள ராஜீவ்காந்தி நெஞ்சக நோய் சிகிச்சை மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 11 பேர் அவரவர் வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், சீனாவில் யுகான் பல்கலைகழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் சமீபத்தில் நாடு திரும்பினார். அவருக்கு  கொரோனா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கபட்ட மாணவரின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது.

கேரளாவில் மட்டும் 800-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.