மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தலைமறைவாக இருந்த சித்தாண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை? + "||" + TNBSC abuse: head The cryptic ideology Private hospital treatment?

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தலைமறைவாக இருந்த சித்தாண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை?

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தலைமறைவாக இருந்த சித்தாண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் தலைமறைவானதாக கூறப்பட்ட காவலர் சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகியுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னையில் தலைமை காவலராக பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டி என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, சென்னையில் இருந்து சிவகங்கை சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீசார் காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த உதவியாளர் வேல்முருகன் என்பவரை கைது செய்தனர்.

இவர், தலைமைக் காவலர் சித்தாண்டியின் தம்பி என்பதும், குரூப் -2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பெற்று காரைக்குடி இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2018 நவம்பர் மாதம் இளநிலை உதவியாளராக சேர்ந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் தலைமைக் காவலர் சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சை பெற்றுவருவதாக  தகவல் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் அடுத்த அதிரடியாக  தலைமறைவாகியுள்ள காவலர் சித்தாண்டியின் பங்கு என்ன? என்பது குறித்து சிபிசிஐடி டிஎன்பிஎஸ்சியிடம் விவரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.