தேசிய செய்திகள்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம் + "||" + A Jamia Millia Islamia student was shot at during a protest march from the university to Rajghat on Thursday.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. அந்த வகையில், டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை பேரணியாக சென்றனர். 

அப்போது துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர்,  மாணவர்கள் கூட்டத்தை நோக்கி சுட்டார். இதில்,  மாணவர் ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த மாணவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படும் நபரை, பிடித்த காவல்துறையினர், காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல்
டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இந்திய அரசு நேற்று முன்தினம் விசா வழங்கி அனுமதி அளித்துள்ளது.
3. டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி, பா.ஜ.க. அரசுக்கு பாடம் - காதர் முகைதீன் பேட்டி
‘டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி என்பது, பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளது’ என்று காதர் முகைதீன் கூறினார்.
4. ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு: தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்குறுதி
டெல்லியில் ஆட்சியை பிடித்தால், ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு வழங்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5. டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.