உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பரவும் அபாய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 23-வது இடம் + "||" + Countries that are at risk of contracting the corona virus List 23rd place for India

கொரோனா வைரஸ் பரவும் அபாய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 23-வது இடம்

கொரோனா வைரஸ் பரவும் அபாய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 23-வது இடம்
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 23-வது இடத்தில் உள்ளது.
லண்டன்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்த உள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7800  ஆக உயர்ந்துள்ளது. 

 சீனாவில் இருந்து கேரளாவிற்கு வந்த கேரள மாணவர்  ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு  உள்ளது. யுகான் பல்கலைகழகத்தில் படித்து வந்த மாணவர் சமீபத்தில் நாடு திரும்பி உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது. 

இங்கிலாந்தை  சேர்ந்த சவுத்ஹாம்ப்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு நடைபெறும் விமானம் உள்ளிட்ட பயணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் 30 நாடுகளில் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதில் தாய்லாந்து முதலிடத்திலும், இதற்கு அடுத்த இடத்தில் ஜப்பான், ஹாங்காங் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் அமெரிக்கா ஆறாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 10வது இடத்திலும், பிரிட்டன் 17வது இடத்திலும், இந்தியா 23வது இடத்திலும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அதிகம் பாதிக்கப்படும் நகரங்கள் பட்டியலில் தாய்லாந்தின் பாங்காக் முதலிடத்தில் உள்ளது. ஹாங்காங், தைவானின் தைபே அதற்கடுத்த இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தாக்குதல் குறைய தொடங்கியுள்ளது - சீன அரசு
கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
2. கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
ஜப்பான் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை கொள்ளை கும்பல் ஒன்று திருடி சென்றது.
3. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
4. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.
5. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது.