தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: மத்திய அரசின் உதவியை கோரியுள்ளோம்- கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல் + "||" + Coronavirus in Kerala: Patient at Thrissur hospital, Gene Sequencing to confirm infection.

கொரோனா பாதிப்பு: மத்திய அரசின் உதவியை கோரியுள்ளோம்- கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல்

கொரோனா பாதிப்பு: மத்திய அரசின் உதவியை கோரியுள்ளோம்- கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி திருச்சூர் மருத்துவமனையில் உள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள அமைச்சர் ஷைலஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
திருவனந்தபுரம்,

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி திருச்சூர் மருத்துவமனையில் உள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள அமைச்சர் ஷைலஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அவர், நிலைமையை அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும், திருச்சூரில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதுபோல, கேரளாவில் அனைத்து மருத்துவ கல்லூரிகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறினார்​. அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மையங்கள் அமைத்துள்ளதாகவும், வுகானிலிருந்து திரும்பிய 106 பேரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவுத் அமைச்சர் ஷைலஜா கூறினார். மத்திய அரசின் உதவியை கோரியுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2. கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் சாவு
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர்.
3. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் குடியிருப்பு பகுதியில் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை - திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை
திருப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் குடியிருந்த பகுதியை சுற்றிலும் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
5. கொரோனா சிகிச்சைக்காக மருந்துகளை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் டிரம்ப் வேண்டுகோள்
கொரோனா வைரசைக்கட்டுப்படுத்த மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அளிக்கலாம் என்று டிரம்ப் கூறியிருந்தார்.