தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு: திகார் சிறையில் நாளை ஒத்திகை + "||" + Pawan Jallad Arrives at Tihar Before Scheduled Hanging in Nirbhaya Case, Uncertainty Over Execution

நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு: திகார் சிறையில் நாளை ஒத்திகை

நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு: திகார் சிறையில் நாளை ஒத்திகை
நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படுவதையொட்டி திகார் சிறையில் நாளை ஒத்திகை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் வரும் பிப்ரவரி 1 ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும்,  குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்  பிப்ரவரி 1-ஆம் தேதி நிறைவேற்றபடவுள்ள தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

குற்றவாளிகள் கருணை மனு அளித்துள்ளதாலும், மனுக்கள் நிலுவையில் உள்ளதாலும் பிப்.,1 ம் தேதி அறிவித்தபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ஆம் தேதி குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என திகார் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார். திகார் அதிகார் ஒருவர் கூறுகையில், 

2012 ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஊழியரான பவன் ஜலாத் தண்டனையை நிறைவேற்ற உள்ளார். இதற்கான ஒத்திகை நாளை (ஜனவரி31) திகார் சிறை வளாகத்தில் நடக்க உள்ளது. குற்றவாளிகள் 4 பேரும் திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்றார்.