தேசிய செய்திகள்

ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல் + "||" + Culprit Will Not Be Spared": Home Minister Amit Shah On Jamia Firing

ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்

ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு  டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்
ஜாமியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்று உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் நடுவே கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரைச் சுற்றி வளைத்து பிடித்துச் சென்றனர். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; - “ டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து டெல்லி காவல் ஆணையரிடம் பேசினேன்.  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இதுபோன்ற சம்பவங்களை மத்திய அரசு சகித்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2. அமித்ஷாவுடன் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று சந்திப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார்.
3. குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா? மம்தா பானர்ஜி, ராகுல்காந்திக்கு அமித்ஷா சவால்
குடியுரிமை திருத்த சட்டத்தில், இந்த நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா என மம்தா பானர்ஜி மற்றும் ராகுல்காந்திக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
4. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகை
குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துைற மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகிறார் என்று பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் கூறினார்.
5. ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல்; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அமித்ஷா உத்தரவு
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.