தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் : பயணிகளை முழு பரிசோதனை செய்ய மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சகம் உத்தரவு + "||" + Ministry of Shipping: The Ministry is on high alert amid the CoronavirusOutbreak

கொரோனா வைரஸ் : பயணிகளை முழு பரிசோதனை செய்ய மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சகம் உத்தரவு

கொரோனா வைரஸ் :  பயணிகளை முழு பரிசோதனை செய்ய மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சகம் உத்தரவு
பயணிகள், ஊழியர்களிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்த உள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7800  ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் இருந்து கேரளாவிற்கு வந்த கேரள மாணவர்  ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு  உள்ளது. யுகான் பல்கலைகழகத்தில் படித்து வந்த மாணவர் சமீபத்தில் நாடு திரும்பி உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது. 

இந்நிலையில், மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், 

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க  மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறு துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்கள் பயணிகள்  மற்றும் ஊழியர்களுக்கு  கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த முழு பரிசோதனை செய்ய  உத்தரவிடப்பட்டுள்ளது. 

நேற்று கொல்கத்தாவில் உள்ள படகு குழாம் ஒன்றில், கப்பல் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு  கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த பரிசோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
தென்கொரியாவில் தீவிரமுடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது.
2. கொரோனா வைரஸ்: இத்தாலியில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2,592 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.
4. தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு 7 பேர் பலி
தென்கொரியாவில் தீவிரமுடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
5. கிலோ உயிருடன் ரூ.49-க்கு விற்பனை: கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடி சரிவு
கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடியாக சரிந்து வருகிறது. ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ.49-க்கு தற்போது விற்பனை ஆகிறது.