தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள் + "||" + 6 testing centers nationwide to detect coronavirus virus Ministries of Health Family Welfare

கொரோனா வைரஸ் கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள்

கொரோனா வைரஸ் கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

சீனாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வைரசால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் பல்வேறு நாடுகள், தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 21 விமான நிலையங்களில் 234 விமானங்கள், 43,346 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.  நாளை முதல் சென்னை உள்ளிட்ட மேலும் 6 நகரங்களிலும், பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிருப்தி உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் - அமெரிக்கா திடீர் மிரட்டல்
கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
2. கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா? - போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டிப்பு
கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிப்பவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டித்தார்.
3. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவன்- மாணவி
கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு மாணவனும், ஒருமாணவியும் விழிப்புணர்வு ஏற்படுதத்தி வருகிறார்கள்.
4. கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்கு ஏற்றிச்செல்லும் வருமானம் ரூ.2,125 கோடி இழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கான வருமானம் ரூ.2,125 கோடி அளவுக்கு குறைந்து விட்டது.
5. கொரோனா வைரஸ் பாதிப்பு: நியூயார்க் நகரில் ஒரே நாளில் 731 பேர் பலி
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நியூயார்க் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் 731 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...