தேசிய செய்திகள்

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.150 வரை உயர வாய்ப்பு + "||" + lpg gas cylinder rates could riseby 100 to 150 in coming yearupdate

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.150 வரை உயர வாய்ப்பு

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.150 வரை உயர வாய்ப்பு
சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.150 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

சமையல் கேஸ் சிலிண்டர்களுக்காக எண்ணெய் நிறுவனங்களுக்கான மானியத்தை 2022-ம் ஆண்டு தொடக்கத்துக்குள் நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், அடுத்து வரும் ஆண்டுகளில் சிலிண்டர் விலை ரூ.150 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இந்த விலைக் குறைவை அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. 

அதாவது மானியைத்தை ரத்து செய்யும் விதமாக, எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை சிலிண்டர் விலையை உயர்த்தி குறைத்துக் கொள்ள அரசு அனுமதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...