மாநில செய்திகள்

இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு + "||" + Information about Jayakumar is nice

இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு

இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு
குரூப்–4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் வீடு சென்னை முகப்பேர் மேற்கில் உள்ளது.
சென்னை, 

குரூப்–4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வீடு சென்னை முகப்பேர் மேற்கில் உள்ளது. அந்த வீட்டில்  போலீசார் நடத்திய சோதனையில், லேப்–டாப், பென்டிரைவ், முக்கிய ஆவணங்கள், 60–க்கும் மேற்பட்ட பேனாக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ஜெயக்குமார் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. அவர் பற்றிய தகவல் அளிக்க புகைப்படம் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. அவர் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்தனர்.

ஜெயக்குமார் குறித்த தகவலை போலீஸ் எஸ்.பி.க்கள் மல்லிகா – 9940269998, விஜயகுமார் – 9443884395, ரங்கராஜன் – 9940190030, டி.எஸ்.பி.க்கள் சந்திரசேகரன் – 9498105810, கனகராஜ் – 9444156386 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...