உலக செய்திகள்

தவறாக பயன்படுத்தி பணம் ஈட்டுவதாக குற்றச்சாட்டு தனது பெயருக்கு காப்புரிமை கோரும் சிறுமி + "||" + Greta Thunberg patents own name and ‘Fridays for Future’

தவறாக பயன்படுத்தி பணம் ஈட்டுவதாக குற்றச்சாட்டு தனது பெயருக்கு காப்புரிமை கோரும் சிறுமி

தவறாக பயன்படுத்தி பணம் ஈட்டுவதாக குற்றச்சாட்டு தனது பெயருக்கு காப்புரிமை கோரும் சிறுமி
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க்.
ஸ்டாக்ஹோம், 

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். இவர் ஐ.நா. சபையில் உலக தலைவர்களிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பி ஆற்றிய உரை சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இதன் மூலம் அவர் உலக நாடுகளால் அடையாளம் காணப்பட்டார்.

இந்த நிலையில் தனது பெயரையும் தனது இயக்கமான ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ (பிரைடேஸ் பார் பியூச்சர்) இயக்கத்தின் பெயரையும் தவறான வழிகளில் பயன்படுத்துவதை தடுக்க அவற்றுக்கு காப்புரிமை பதிவு செய்துள்ளதாக கிரேட்டா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனது பெயரும், எங்கள் இயக்கத்தின் பெயரும் எங்களின் அனுமதியின்றி தொடர்ந்து விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கும் எங்கள் இயக்கத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் காப்புரிமை பதிவு செய்வதில் எந்த ஆர்வமும் இல்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் ஆகியோரை தொடர்பு கொள்வதற்காக சிலர் என்னையும், என்னுடைய பெயரையும் தவறான வழியில் பயன்படுத்த முயல்கின்றனர். சிலர் என் பெயரையும் என் இயக்கத்தின் பெயரையும் பயன்படுத்திப் பணம் ஈட்டி வருகின்றனர். எனவேதான், நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...