உலக செய்திகள்

உகான் நகரவாசிகளுக்கு மனநல ஆலோசனை சீன பத்திரிகையாளர் தினத்தந்திக்கு தகவல் + "||" + Psychiatric counseling for Ugandan residents

உகான் நகரவாசிகளுக்கு மனநல ஆலோசனை சீன பத்திரிகையாளர் தினத்தந்திக்கு தகவல்

உகான் நகரவாசிகளுக்கு மனநல ஆலோசனை சீன பத்திரிகையாளர் தினத்தந்திக்கு தகவல்
உகான் நகரவாசிகள் மனம் தளர்ந்துவிடாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள்.
சீனாவில் குறிப்பாக உகான் நகரில் உள்ள நிலைமை குறித்து சீன ஊடகக் குழுமத்தின் தமிழ்ப் பிரிவு பத்திரிகையாளர் ம.பண்டரிநாதன் தினத்தந்திக்கு அனுப்பியுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

மிகவும் பாதிப்படைந்துள்ள உகான் நகரவாசிகள் மனம் தளர்ந்துவிடாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள். இணையதளம் வழியாகவும் பலர் மனநல ஆலோசனைகள் வழங்குகின்றனர். உகானில் எதுவும் கிடைப்பதில்லை என கூறப்படுவது புரளி. இக்கட்டான இந்த நேரத்திலும் அங்கடிகள், காய்கறி கடைகள் திறந்து உள்ளன. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், முகக்கவசங்கள் தடையின்றி கிடைக்கின்றன.

மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அனைவரும் தொற்றுநோயில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இதனால் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இடைவிடாமல் இயங்கி வருகின்றன. இளைஞர்கள் முதல் வயதான தம்பதிகள் வரை பலர் சாலையோரங்களில் நின்றுகொண்டு பாதசாரிகளுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மக்களை பீதி அடையச் செய்யும் விதமான செய்திகளை ஊடகங்கள் பரப்புவதில்லை. ஆங்கில மருத்துவத்துடன், சீன பாரம்பரிய மருந்துகளை சேர்த்து பயன்படுத்துவதால் பலரும் குணம் அடைந்துள்ளதாக டாக்டர் ஜங்போலி என்பவர் கூறியுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...