மாநில செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை + "||" + Puducherry: Former Councilor of Congress Party Killed

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை
வெடிகுண்டு வீசியதால் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய முன்னாள் கவுன்சிலரை மர்ம நபர்கள் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சாம்பசிவம் (வயது 35) இன்று காலை திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது கிருமாம்பாக்கம் அரசு பள்ளி அருகே அவரது காரின் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதிலிருந்து தப்பிய சாம்பசிவம், காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

தப்பி ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்ற அவர்கள், சாம்பசிவத்தை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதன் பின்னர் அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த இடத்தை காங்கிரஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் - ஜெய்ராம் ரமேஷ் சொல்கிறார்
மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
2. புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
3. புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி..!
புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டைத் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
4. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: வருகிற 31 ந்தேதி வரை புதுச்சேரியில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொடக்கப் பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.
5. கொரோனா பெரிய பிரச்சினை; இந்திய பொருளாதாரம் அழியும் -ராகுல் காந்தி
கொரோனா பெரிய பிரச்சினை இந்தியப் பொருளாதாரம் அழியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...