உலக செய்திகள்

கொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் அவசர நிலை -இந்தியாவில் உச்சக்கட்ட நடவடிக்கை + "||" + Coronavirus: WHO declares global emergency

கொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் அவசர நிலை -இந்தியாவில் உச்சக்கட்ட நடவடிக்கை

கொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் அவசர நிலை -இந்தியாவில் உச்சக்கட்ட நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் அவசர நிலையை அறிவித்து உள்ளது.
ஜெனீவா

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய  கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி  உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக  பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நேற்று கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது. இது அரிதாகப்  பயன்படுத்தப்படும் ஒரு அறிவிப்பு ஆகும். இது நோயைக் கையாள்வதில் மேம்பட்ட சர்வதேச ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ்  பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது எங்களது மிகப் பெரிய  கவலையாகும். இது சீனா மீதான நம்பிக்கையில்லா நடவடிக்கை இல்லை. நோய் பரவுவதை  சமாளிக்க விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக சீன அரசாங்கத்தை பாராட்டியது.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செயல்பட வேண்டும். நாம் ஒன்றாக செயல்பட்டால் இதை கட்டுப்படுத்த  நிறுத்த முடியும் என கூறினார்.

இது குறித்து இந்திய சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர்  கூறியதாவது;-

சுகாதார அமைச்சகம் உலக சுகாதார அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளில் பரவுகிறது. இந்த வைரஸ் இப்போது இந்தியா உட்பட 21 நாடுகளில் உள்ளது.

சுகாதாரத் துறை அனைத்து விமான நிலையங்களிலும்  ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. இப்போது ஜனவரி 15 முதல் சீனாவுக்கு பயணம் செய்து வந்துள்ள அனைவரும் வைரஸிற்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தாக்குதல் குறைய தொடங்கியுள்ளது - சீன அரசு
கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
2. கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
ஜப்பான் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை கொள்ளை கும்பல் ஒன்று திருடி சென்றது.
3. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
4. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.
5. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது.