தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கது -ராம்நாத் கோவிந்த் + "||" + President Ramnath Kovind: The mature way in which the countrymen behaved after the Supreme Court's decision on Ramjanmabhoomi is also praiseworthy

அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கது -ராம்நாத் கோவிந்த்

அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கது -ராம்நாத் கோவிந்த்
அயோத்தி ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் நடந்து கொண்ட முதிர்ச்சியுள்ள தன்மை பாராட்டத்தக்கது என ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி

பட்ஜெட் தொடருக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது. இது, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்இரு சபைகளின்  கூட்டுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.

கையில் கறுப்பு பட்டை அணிந்தபடி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்  காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்று உள்ளனர்.

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற நாம்  கடமைப்பட்டுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

* காந்தி, நேரு ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றியதாக இந்த 10 ஆண்டுகள் இருக்கும்.

* அயோத்தி ராமர் கோவில் வழக்கின் தீர்ப்பை மக்கள் முழு மனதாக ஏற்றுக்கொண்டனர். ராம்ஜென்ம பூமி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் நடந்து கொண்ட முதிர்ச்சியுள்ள முறை பாராட்டத்தக்கது.

* எளிமையாக தொழில் தொடங்கும் திட்டத்தில் இந்தியா முன்னேறியுள்ளது.

* பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு  பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பின் 370-வது பிரிவு மற்றும் 35-ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பானது மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் சம வளர்ச்சிக்கு வழிவகுத்து உள்ளது.

* பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துகின்றன என்பது நமது அரசின் கருத்து. அதே நேரத்தில், எதிர்ப்பு என்ற பெயரில் எந்தவொரு வன்முறையும் சமூகத்தையும் நாட்டையும் பலவீனப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காந்தியின் விருப்பம் நிறைவேறி உள்ளது -ராம்நாத் கோவிந்த்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.