தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காந்தியின் விருப்பம் நிறைவேறி உள்ளது -ராம்நாத் கோவிந்த் + "||" + President Ramnath Kovind: I am happy that the wish of the Father of the Nation Mahatma Gandhi has been fulfilled through the enactment of the Citizenship Amendment Act by both the Houses of Parliament.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காந்தியின் விருப்பம் நிறைவேறி உள்ளது -ராம்நாத் கோவிந்த்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காந்தியின் விருப்பம் நிறைவேறி உள்ளது -ராம்நாத் கோவிந்த்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி

பட்ஜெட் தொடருக்காக இன்று நாடாளுமன்றம் கூடியது. இது, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் எனவே இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

கையில் கறுப்பு பட்டை அணிந்தபடி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்  காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்று உள்ளனர்.

ஜனாதிபதி உரையின்  முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நமது அரசாங்கத்தின் சிறப்புக் கோரிக்கையின் பேரில், சவுதி அரேபியா ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செய்து உள்ளனர்.  ஹஜ் பயண முழு செயல்முறையும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைனில் செய்யப்பட்ட முதல் நாடு இந்தியா ஆகும்.

* பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். (குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசும்போது கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது)

* இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

* ஏழை மக்களுக்காக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

*  குற்றங்கள் குறைய அரசு சட்டங்கள் இயற்றி உள்ளது. சீட்டு மோசடியில் இருந்து மக்களை அரசு காப்பாற்றி உள்ளது.

* கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

* கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒரு சாதனை என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக செயல்பட்டது.

* மத்திய அரசு ஏழைகளுக்கும் பெண்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

* இந்தியாவின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.

* மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பலனளிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கது -ராம்நாத் கோவிந்த்
அயோத்தி ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் நடந்து கொண்ட முதிர்ச்சியுள்ள தன்மை பாராட்டத்தக்கது என ராம்நாத் கோவிந்த் கூறினார்.