தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Three terrorists killed, cop injured in firing near toll plaza on Jammu-Srinagar highway

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் அதிகாலை 5 மணியளவில் லாரி ஒன்றை நிறுத்தி போலீசார்  சோதனை நடத்தினர். அப்போது அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்,  போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக  சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து போலீசாரும் திருப்பி சுட்டனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் 3 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டையில் போலீசார் ஒருவரும் காயமடைந்தார். மேலும் 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால்  அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

கீராநகர் எல்லை வழியே அவர்கள் ஊடுருவியிருக்கலாம் எனவும், லாரியில் ஸ்ரீநகரை நோக்கி சென்று கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர் ; முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது பயணத்திற்குப் பிறகு தூது குழுவினர் மகிழ்ச்சி
ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது என பயணத்திற்குப் பிறகு தூதர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
3. பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்தி; காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்
பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்திகளைத் தொடர்ந்து காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
4. ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு
2020-2021 நிதியாண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.