மாநில செய்திகள்

கூட்டணி என்பதால் குட்டகுட்ட குனிய மாட்டோம் -பிரேமலதா விஜயகாந்த் + "||" + Desde la alianza No nos doblaremos Premalatha Vijayakanth

கூட்டணி என்பதால் குட்டகுட்ட குனிய மாட்டோம் -பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி என்பதால் குட்டகுட்ட குனிய மாட்டோம் -பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணி என்பதால் குட்டகுட்ட குனிய மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா 29-வது ஆண்டு திருமண  நாளையொட்டி எல்.கே.சுதீசும் அவரது துணைவியாரும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி அக்கட்சி சார்பில் இன்று நடைபெற்றது.

மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்து! என கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேசினார்.

கூட்டத்தில் பேசிய  கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  கூறியதாவது:-

தொண்டர்கள் தான் எங்கள் குடும்பம். எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணித் தான் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணி  என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தேமுதிக. நாங்கள் மீண்டு எழுவோம்.

2021-ம் ஆண்டு தேர்தலுக்காக கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம்  மேற்கொள்வோம். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வார்.

2021-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக வரும். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 20-வது ஆண்டு கொடிநாள் விழா: 118 அடி உயர கம்பத்தில் விஜயகாந்த் கொடி ஏற்றுகிறார்
20-வது ஆண்டு கொடிநாள் விழாவை முன்னிட்டு தே.மு.தி.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2. ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
3. சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது - விஜயகாந்த்
கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
4. மராட்டியத்தில் அவசர கதியில் புதிய அரசு பதவி ஏற்பு: கையில் அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யக்கூடாது - பா.ஜ.க. மீது பிரேமலதா விஜயகாந்த் தாக்கு
மராட்டியத்தில் பா.ஜ.க. அரசு பதவி ஏற்றிருப்பது குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என கூறினார்.
5. மராட்டியத்தில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு, பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் - பிரேமலதா விஜயகாந்த்
மராட்டியத்தில் நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.