தேசிய செய்திகள்

சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானம் -இந்திய அரசு நடவடிக்கை + "||" + Indians To Fly Out Of China Tonight. What Happens Next To Them: 10 Points

சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானம் -இந்திய அரசு நடவடிக்கை

சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானம் -இந்திய அரசு நடவடிக்கை
சீனா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் மருத்துவக் குழுவினர் பாதுகாப்புடன் கூடிய முக மூடிகளை அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய  கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி  உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக  பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு நேற்று கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, சீனாவின் வுஹான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் சீனா புறப்படுகிறது.

போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம், டெல்லி சென்று அங்கு சுகாதார அமைச்சகத்தினால் தயாராக வைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் கருவிகளை வாங்கிக்கொண்டு சுமார் ஆறு மணி நேரத்தில் வுஹானை அடைகிறது. பின்னர் அங்கிருந்து 2 முதல் மூன்று மணி நேரத்தில் புறப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதிகாலை 2 மணிக்குள் இந்தியா திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது விமானம் நாளை இந்தியாவில் இருந்து சீனா புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுஹானில் இருந்து இந்தியா மீட்டு வரப்படும் இந்தியர்கள் 14 நாட்கள் டெல்லி மற்றும் மானேசரில் உள்ள மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். தொடர்ந்து, அவர்களுக்கு எந்த நோய் தொற்று ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்ததுடன், அது இந்தியாவின் விவகாரம் என்றார்.
2. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார்
மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
3. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.
4. சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - வெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துவிட்ட நிலையிலும், இந்த பேரிடருக்கு உதவ முன்வந்துள்ள இந்தியாவின் விருப்பத்தை வேண்டுமென்றே அந்த நாடு தள்ளிப்போட்டு வருகிறது.