தேசிய செய்திகள்

2018 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களுக்கான மரண தண்டனை 53 சதவீதம் அதிகரித்துள்ளது + "||" + Death penalty for sex offenses in 2018- 53 percent increased

2018 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களுக்கான மரண தண்டனை 53 சதவீதம் அதிகரித்துள்ளது

2018 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களுக்கான மரண தண்டனை 53 சதவீதம் அதிகரித்துள்ளது
பாலியல் குற்றங்களுக்கான மரண தண்டனை 53 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகள் விசாரணையில் சிக்கியுள்ளன.
ரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரந்துபட்டு உலக அளவில் அதிகரித்து வருகிறது. உலகளவில், மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, கடந்த ஆண்டு ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்து உள்ளதாக மனித உரிமைகள் குழு அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2015 முதல் எந்தவொரு மரணதண்டனையும்  மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இந்திய நீதிமன்றங்கள் மிகக் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.  கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், நாளை ( பிப்ரவரி 1-ம் தேதி)  காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை  மரண தண்டனை நிறைவேற்றப்படாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மறு உத்தரவு வரும் வரை  மரணதண்டனை வ்ழங்க கூடாது என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குற்றவாளிகளுக்கு  நிறைவேற்றபட்ட தண்டனையை இரண்டாவது முறையாக  ஒத்திவைத்து உள்ளது டெல்லி நீதி மன்றம்

இந்த மரண தண்டனை நிறைவேற்றபட்டால்  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில்  நான்கு மரணதண்டனைகள்  மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடைசியாக 2015-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் பயங்கரவாதத்திற்கு தண்டனை பெற்றவர்கள், ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.

1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, பெரும்பான்மையான மரணதண்டனைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.சுதந்திரத்திற்குப் பிறகு உத்தரபிரதேசம் 354 பேரை தூக்கிலிட்டுள்ளது, அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் 90 பேர் அரியானாவும்,  73  பேரை மத்தியப் பிரதேசமும் தூக்கிலிடப்பட்டு உள்ளது.

பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நீதிமன்றங்கள் வழங்கிய மரண தண்டனைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், 186 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது, இது 2017 ல் 121 ஆக இருந்தது. 2017யை விட 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை  53 சதவீதம் உயர்வு  என்று சிறைச்சாலை புள்ளிவிவரம் இந்தியா 2018, தேசிய குற்ற பதிவுப் பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

இந்தியாவில், "அபூர்வமான" வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது, இது கொலை, பயங்கரவாதம், கடத்திக் கொலை, போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு தொடர்பான கொலை உள்ளிட்ட பல  சட்டங்களின் கீழ் நீதிமன்றங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.2018 ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 40 சதவீததிற்கும் அதிகமானவர்கள் மற்றும் 2019 ல் பாதி (52.9 சதவீதம் ) பேர் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை உள்ளிட்ட வழக்குகளுக்கு தண்டனை பெற்றவர்கள் என்று புதுடெல்லி  தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் (என்.எல்.யூ) ஆண்டு அறிக்கை டெத் பெனால்டி இந்தியா 2019 தெரிவித்துள்ளது. 

பொதுவான கோபம் மற்றும் நாட்டை பதற்றத்தை உருவாக்கும் விதமாக பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு மரண தண்டனைகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும்  குற்றத்திற்கு  மரண தண்டனை  விதிக்கும் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் 2012 ஐ)  இந்தியா ஆகஸ்ட் 2019 -ல், திருத்தியது.


 ஐதராபாத்தில் 27 வயதான கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் 2019 டிசம்பரில் "அவர்கள் தப்பி ஓட முயன்றபோது" போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது நீதிக்கு புறம்பான கொலைகள் என்று அழைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆந்திர மாநில சட்டமன்றம் பின்னர் பாலியல் பலாத்கார வழக்குகளில் மரண தண்டனையை அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது.

2012 ல் டெல்லியில் நிர்பயா கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான கோரிக்கைகள் எழுந்தன.  இது குற்றவியல் சட்டம் (திருத்தச் சட்டம்), 2013 உட்பட பல சீர்திருத்தங்கள் மற்றும் சட்டமன்ற மாற்றங்களுக்கு வழிவகுத்தது, இது  வோயூரிஸம், அமிலத் தாக்குதல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவை இந்த சட்டத்தின் கீழ் அடங்கும்.

எவ்வாறாயினும், சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலும் இந்த வழக்குகளில்  கைது மற்றும் தண்டனை விகிதங்களில் சிறிதளவு கூட பாதிப்பு ஏற்படவில்லை.

பிப்ரவரி 2019 ஆய்வின் அடிப்படையில் இந்தியாஸ்பென்ட் ஆகஸ்ட் 2019 இல் அறிக்கையில்  பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனை விகிதம் 2007 முதல் சீரான சரிவில் இருந்து வருகிறது, இது 2006 ல் 27 சதவீதமாக இருந்தது. அது  2016 ஆம் ஆண்டில் 18  சதவீதம்  என்ற  குறைந்த அளவை எட்டியுள்ளது.

பெண்கள் உரிமை வழக்கறிஞரும் பெண்களுக்கு சட்ட உதவி வழங்கும் அமைப்பான மஜ்லிஸின் இயக்குநருமான ஃபிளேவியா ஆக்னஸ் கூறும் போது 

பாதிக்கப்பட்டவர் உயர் அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகவும், குற்றவாளிகள் கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கும்போது கடுமையான தண்டனைக்கு குரல் எழுகிறது.இதற்கு நேர்மாறாக இருந்தால், அத்தகைய குரல்  எதுவும் எழுப்பப்படுவது இல்லை . 

தண்டனை பெற, நீங்கள் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் மற்றும் குடும்ப ஆதரவை வழங்க வேண்டும் என கூறினார்.

டிசம்பர் 31, 2019 நிலவரப்படி, இந்தியாவில் 378 கைதிகள் மரண தண்டனை  கைதிகள் உள்ளனர் என்று புதுடெல்லி  தேசிய சட்ட பல்கலைக்கழக  அறிக்கை தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றங்கள் 2019 ல் 102 மரண தண்டனைகளை விதித்தன, இது முந்தைய ஆண்டில் 162 ஆக இருந்தது.

2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை (102 இல் 54) பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு என அறிக்கை குறிப்பிட்டு உள்ளது. இவர்களில், பாதிக்கப்பட்டவர் 40 வழக்குகளில் 12 வயதுக்கு குறைவானவர்கள்  ஆவார்கள்.

பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட கொலை வழக்குகளில் மரண தண்டனை கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 

2016 ஆம் ஆண்டில், 57.1 சதவீத  மரண தண்டனைகள்  கொலைக்காகவும்  18 சதவீதம்  பாலியல் குற்றங்களுடன் கொலை வழக்குகளுக்கும் வழங்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டில், பிந்தையது 52.9 சதவீதமாக  ஆக உயர்ந்தது 

2019 ஆம் ஆண்டில் முறையே 26 மற்றும் 17 மரண தண்டனைகளை ஐகோர்ட்டுகளும், சுப்ரீம் கோர்ட்டும்  உறுதிப்படுத்தின. அவற்றில் 17 (65.3 சதவீதம் ) மற்றும் 11 (57.1 சதவீதம் ) பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் உள்ளன என்று புதுடெல்லி  தேசிய சட்ட பல்கலைக்கழக  அறிக்கை கூறுகிறது.

மேலும், ஐகோர்ட்டுகளும், சுப்ரீம் கோர்ட்டும் முறையே 56 மற்றும் ஏழு மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றி உள்ளன. அவற்றில் 15 (26.7 சதவீதம் ) மற்றும் நான்கு (64.7 சதவீதம் ) பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் ஆகும். 

விரைவான நீதியை வழங்க மாநில அரசுகள் விரைவு நீதிமன்றங்களை அமைத்து வருகின்றன. ஆனால்  இவைகள்  அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் 581 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கபட்டன.ஆனால்  ஏறக்குறைய 590,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என  தி இந்து 2019 ஆகஸ்டில் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன, அதே நேரத்தில் 56 சதவீத  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  விரைவான நீதிமன்றங்கள் இல்லை.

ஆந்திர மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட திருத்தங்களில் ஒன்று, 21 நாட்களுக்குள்  விசாரணையை முடிக்க வேண்டும் என்பது.  இதனால் முழுமையற்ற குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படலாம் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டரீதியான ஜாமீன் வழங்கப்படலாம்.  இவை அனைத்தும் தீங்கு விளைவிக்கும் பாதிக்கப்பட்டவரின் நலனுக்கு அல்லது வழக்கின் முடிவுக்கு விரோதமாக இருக்கும்.

காவல்துறையின் பயிற்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றில் அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டும் வேண்டும், இதனால் அவர்கள் குற்றத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு சரியான  விசாரணையை நடத்த வழிவகை செய்யவேண்டும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

கேள்விக்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த மூன்று வழக்குகளில் 10 பேரை 2019 ல் சுப்ரீம் கோர்ட்  விடுவித்தது. ஒரு வழக்கில், விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மற்ற இரண்டு வழக்குகளில், மீண்டும் புதிய விசாரனைக்கு கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. 

போதுமான தடயவியல் ஆய்வகங்கள் இல்லாதது, மற்றும் அதிக சுமை மற்றும் குறைவான ஊழியர்களைக் கொண்ட விரைவு நீதிமன்றங்கள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் நீதித்துறையின் குறைகலாக சுட்டிக்காட்டுகின்றன இதன் விளைவாக, தண்டனை விகிதங்கள் குறைவாகவே உள்ளன. 2018 ஆம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் 93.2 சதவீத  கற்பழிப்பு வழக்குகளிலும், 94.3 சதவீத  கற்பழிப்பு வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது  என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்ட கற்பழிப்பு வழக்குகள் 27.2 சதவீதம்  மட்டுமே தண்டனையுடன் முடிவடைந்தன, அதேபோல் 31.5 சதவீத  கற்பழிப்பு வழக்குகள் போக்சோ  சட்டத்தின் கீழ்  என தேசிய குற்ற பதிவு பணியக  புள்ளிவிவரம்   காட்டுகிறது. 

2018 ஆம் ஆண்டில், இந்திய நீதிமன்றங்கள் 17,313 வழக்குகளில் விசாரணைகளை நிறைவு செய்தன, 138,642 கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன - இது 88.7 சதவீதம் ஆகும்.

அது போல பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கூட குற்றத்தை அரிதாகவே வெளியில் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்முறை வழக்குகளில் 99.1 சதவீதம்  பேர் பதிவு செய்யப்படாமல் போகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் - 2018 இல் 93.8 சதவீதம்  கற்பழிப்பு குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்கள் மற்றும் 50 சதவீதம் பேர்  பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள்  அல்லது முதலாளிகளாக இருந்தனர் என தேசிய குற்ற பதிவு பணியக  புள்ளிவிவரம் கூறுகிறது. 

மரண தண்டனைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அம்னஸ்டி இன்டர்நேஷனல், கடந்த 2018 ஆம் ஆண்டு 690 மரணதண்டனைகள் நடந்ததாக கூறி உள்ளது. இது 2017 உடன் ஒப்பிடும்போது 30 சதவீதத்துக்கும் குறைவு.

இதற்கு நேர்மாறாக, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் 250-க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் வழங்கப்பட்டு உள்ளது. வங்காளதேசத்தில்  229-க்கும் மேற்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டு உள்ளன.


ஆனால் உலகளவில், 2017-ஐ (2,591) விட 2018-ல் (2,531) சற்றே குறைவான மரண தண்டனைகள் பதிவாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட அனைத்து மரண தண்டனைகளிலும் கிட்டத்தட்ட அதிகமாக  ஈரான், சவூதி அரேபியா, வியட்நாம், ஈராக் ஆகிய  நான்கு நாடுகளில் நடந்தது. சீனாவில் 1000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு அபூர்வ உத்தியோகபூர்வ கருத்தில், வியட்னாம் கடந்த ஆண்டு நவம்பரில் 85 மரணதண்டனைகளை நிறைவேற்றியதை உறுதிப்படுத்தியது. முந்தைய ஆண்டுகளில், வியட்னாம் மரண தண்டனைகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில்  2017 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு மரணதண்டனைகளின் எண்ணிக்கை  46 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பெரும்பாலும் வியட்னாமில் இருந்து வந்த புள்ளி விவரங்களாகும். ஜப்பான் 15 பேரையும், பாகிஸ்தான் குறைந்தது 14 பேரையும், சிங்கப்பூர் 13 பேரையும் தூக்கிலிட்டது.

அமெரிக்காவில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, முந்தைய ஆண்டை விட சற்றே அதிகமான மரணதண்டனைகள் இருந்தன.

2018 ஆம் ஆண்டில் அறியப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கை பாகிஸ்தானில் இருந்தது. 4,864-க்கும் மேற்பட்ட மரண தண்டனை வழக்குகள் உள்ளன.

வங்காளதேசத்தில்  1,500-க்கும் மேற்பட்ட மரண தண்டனை வழக்குகள் இருந்ததாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறி உள்ளது.