தேசிய செய்திகள்

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை: தொடர்ந்து போராடுவேன் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி + "||" + Asha Devi, mother of the 2012 Delhi gang-rape victim

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை: தொடர்ந்து போராடுவேன் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை: தொடர்ந்து போராடுவேன் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து போராடுவேன் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்ரவரி-01ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக நாளையும் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார், தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். அரசு அவர்களை தூக்கில் போட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க கூறியுள்ளது கல் மனதையும் கரைய வைத்துள்ளது.