தேசிய செய்திகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையில் முன்னேற்றம்: கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா பேட்டி + "||" + Kerala Health Minister K.K Shylaja The condition of the coronavirus patient is improving

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையில் முன்னேற்றம்: கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா பேட்டி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையில் முன்னேற்றம்: கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா பேட்டி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
 
சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 213 உயிர்களை பலி வாங்கி உள்ளது. கரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு தரப்பில் ரூ.28,636 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சீனா மட்டுமின்றி பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளில் சுமார் 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவுடனான சுமார் 2,700 மைல் எல்லைப் பகுதிகளை ரஷ்யா நேற்று சீல் வைத்து மூடியது.

இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீனாவில் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் அவர்கள் நாடு திரும்ப தொடங்கினர். இதன்படி சீனாவில் இருந்து சுமார் 1,050 பேர் கேரளாவுக்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள சுகாதாரத் துறை மந்திரி கே.கே.சைலஜா  திருவனந்தபுரத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது:

சீனாவிலிருந்து கேரளா வந்த 1471 பேர்களில் 1 நபருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் அறிகுறி காணப்படுகிறது. இதுவரை எந்த அறிகுறிகளும் இல்லை. இன்று, நோயாளியின் ரத்த மாதிரி புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை எதிர்மறையாக இருந்தால் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சீனாவில் இருந்து வந்த அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2706 பேருக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் வேறு யாருக்கும் பரவவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.